January 4, 2014

► சூனியம் என்பதன் பொருள் என்ன ?



பொய்யை கொண்டுவந்தவர், சூழ்ச்சி செய்பவர், ஏமாத்துபவர், பிரிவினை ஏற்படுத்துபவர்! எனும் பொய்யை மூலதனமாக கொண்ட பரந்த விரிந்த பொருள் படும்.

► பொய்யை கொண்டுவந்தவர் ஏமாற்ற நினைப்பவர் :

"இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்றோ கூறாமல் இருந்ததில்லை."

திருக்குர்ஆன் 51:52

சூனியம் உண்மை என்றால் நபிமார்கள் கொண்டுவந்தது உண்மை என்று யூதர்கள் சொல்கின்றார்கள் என்று பொருள் வரும். ஆக பொய்யை கொண்டு ஏமாத்த வந்தவர் எனும் பொருளையே யூதர்கள் வைத்துள்ளார்கள்.

► பிரிவினை ஏற்படுத்துபவர் :

"....அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது"

அல் குர்ஆன் 2:102

கணவனையும் மனைவியையும் பிரிக்கும் வித்தை

இன்னும் ஒருவர் பிரிப்பது என்று வந்திருப்பதே
அந்த கணவனும் மனைவியும் இயல்பாக வரும் பிரச்சினையில் பிரியவில்லை எதோ பிறரின் சதிமுயட்ச்சியாலே பிரிந்தார்கள், பிரிக்கப்படுவார்கள் என்று வந்துள்ளது ஆக இந்த பிரிவினை உண்மை அல்ல பொய்யை உண்மையாக நம்பவைத்து பிரிக்கும் பிரிவினை

► சூழ்ச்சி செய்பவர் :

“இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).

அல் குர்ஆன் 20:69.

சூழ்ச்சி செய்பவர்களை சூனியக்காரர் என்று அழைக்கப்படுகின்றது மேலும் அவர்கள் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் தெளிவாகின்றது . ஆகா உண்மை ஒருநாளும் தோல்வியடையாது பொய் ஒருநாளும் வெற்றியடையாது என்பது நிரூபணம். சூனியம் எனது பொய்யை நிஜமாக்கும் சூழ்ச்சியே ஆகும்.

► கண்கட்டி வித்தை :

மூஸா நபி காலத்தில், அவர்கள் அற்புதம் நிகழ்த்திக் காட்டும் போது சூனியக்காரர்களும் அற்புதம் நிகழ்த்திக் காட்டினார்கள்.

"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப் / தம் கைத்தடிகளை) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

அல் குர்ஆன் 7:116

"இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

அல் குர்ஆன் 20:66

"கயிறுகளைப் பாம்புகளாக மாற்றினார்கள்' என்று கூறாமல் "அவ்வாறு தோற்றமளித்தது' என்றும் "கண்களை வயப்படுத்தினார்கள்' என்றும் கூறுகிறான்.

"பாம்பு போல் தோற்றமளித்தது''

"கண்களை வயப்படுத்தினார்கள்''

இங்கு சூனியம் என்பது கண்களை கட்டிப்போட்டு உண்மைக்கு புறம்பாக பொய்யை காண்பிப்பது கண்கட்டி வித்தையே என்பது பொருள் படும்

---------------------------------------------------


கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்று புளுகுவோர், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.

இதிலிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்