May 10, 2013

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா?


இந்தப் பதில் வெளியிடப்பட்ட பின்னர் இதில் சொல்லப்பட்ட வரலாற்று ரீதியான குறிப்புகள் குறித்து சிலர் எதிர்ப் பிரச்சாரம் செய்வதாக சில சகோதரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அப்துல் அஸீஸ் அவர்கள் துருக்கி கிலாபத்தில் இருந்து சவூதியை மீட்கவில்லை; துருக்கி கிலாபத் வீழ்ந்த பிறகுதான் அவர் சவூதியைக் கைப்பற்றினார் என்பது போல் அந்த விமர்சனங்கள் இருக்கின்றன.

யாரிடமிருந்து அப்துல் அஸீல் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும் மக்காவிலும், மதீனாவிலும், நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வரலாற்றுடன் தொடர்புடைய இடங்களிலும் நடந்த எல்லா இணைவைப்புக்களும் அனாச்சாரங்களும் கிலாபத் என்ற பெயரில் துருக்கி ஷைத்தான்கள் ஆட்சியின் போதுதான் உருவாக்கப்பட்டன என்பதில் சந்தேகம் இல்லை.

அது போல் அந்த அனாச்சாரங்களை முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபும் சவூதி அரசும் தான் ஒழித்துக் கட்டினார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

வரலாறு சம்மந்தமாக இதில் தவறு இருந்து ஆதாரத்துடன் tntjho@ymail.com என்ற முகவரிக்கு தெரிவித்தால் அதற்கேற்ப மாற்றம் செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்.

ஆனால் துருக்கி ஷைத்தான்கள் தான் கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்பதும் அதை ஒழித்துக் கட்ட முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பாடுபட்டார் என்பதும் இதனால் மாறாது.

 
கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன.

(துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.)

இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின.

பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும் டூம்களிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.

எந்த அளவுக்கு மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹன்பலி என நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நட்த்துவார்கள். இதைப் பார்த்தால் உலகமே காரித்துப்பும் அளவுக்கு இருந்தது.

இது பற்றிய ஆக்கத்தைக் காண http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/kabavil_nangu_thozum_thalangal_irunthathaa/

ஹஜ் உம்ராவுக்கு வரும் பயணிகளிடம் கொடிய வரி விதிக்கப்பட்டது.

கப்ரு வணக்கத்தை இஸ்லாத்தில் நுழைத்த இந்தக் கேடுகெட்டவர்களை எதிர்த்து இப்ன் சவூது படைதிரட்டி போரிட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் பெயரைக் குறிக்கும் வகையில் தான் சவூதி அரசாங்கம் எனப் பெயர் சூட்டப்பட்ட்து.

இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்ற மார்க்க அறிஞர். இவர் ஒரு பக்கம் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்து துடிப்புள்ள இளைஞர்களை உருவாக்கி இருந்தார். அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அநியாயத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் துருக்கியர்களிடமிருந்து நாட்டை மீட்கும் படையுடன் இணைந்து செயலாற்றினார்.

துருக்கி ஷைத்தான்கள் விரட்டி அடிக்கப்பட்ட உடன் எல்லா த்ர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்கார்ர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.

லாயிலாஹ இல்ல்ல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம் செய்யப்பட்ட்து.

நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்ப்ப்பட்டு ஒரே முஸல்லாவாக ஆக்கப்பட்டது.

ஹஜ் உம்ராவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் மட்டும் இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன தர்காக்களை உடைத்து எறிந்ததாலும் புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொன்னவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால் இவரது பெயர் வஹ்ஹாப் அல்ல. அப்துல் வஹ்ஹாபும் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல் வஹ்ஹாப்.

இவரது பெயர் முஹம்மத் ஆகும். முஹம்மதீ என்று பெயர் சூட்டினால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக் கூட்டம் அவ்ரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி தனிமைப்படுத்த முயன்றனர்.

ஆனால் அவரது தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல.

வஹ்ஹாப் என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும். முஹம்மதிகள் என்று சொன்னால் நபி வழி நடப்பவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்று அஞ்சினார்கள். ஆனால் வஹ்ஹாபிகள் என்று அதைவிட அழகான பெயரை அவர்கள் வாயாலேயே அல்லாஹ் சொல்லவைத்து விட்டான்.

வஹ்ஹாப் என்றால் அல்லாஹ்.

வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள்.

நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

துருக்கி ஷைத்தான்களை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீர்ர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். பெருமிதப்படும் வரலாறு சமைத்தவர். அவர் சந்தித்து போன்ற அடக்குமுறைகளையும் எதிர்ப்புகளையும் நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம் என்று சொல்ல முடியாது.

இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் இப்னு சவூதையும் இப்னு அப்துல் வஹ்ஹாபயும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது.

அவர் அன்று துணிச்சலுடன் கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்து தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது என்பதை மறந்து விட முடியாது. நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர் தான் முஹ்ஹம்த் பின் அப்துல் வஹ்ஹாப்.

ஆனால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளன. அதை நாம் சுட்டிக்காட்டி நிராகரித்துள்ளோம்.

ஜசாகல்லாஹ் : Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/nallor_varalaru/thauheed_jamaaathinar_vahhabikala/
Copyright © www.onlinepj.com